புயலுக்கு பெயர் வைப்பது எப்படி?

vahitips
0
புயலுக்கு பெயர் வைப்பது எப்படி?

வடக்கு இந்திய கடல் பகுதியும், வங்கக் கடலை உள்ளடக்கிய மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழைக் காலங்களில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வானிலை ஆய்வில் ஈடுபட்டு வரும் நாடுகளிடையே உள்ளது. அதன் படி வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் ஒன்றிணைந்து கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டி வந்தன. அதன் அடிப்படையில் கடைசியாக இடம்பெற்ற புயலின் பெயர் ஆம்பன் ஆகும். தற்போது புயலுக்கு பெயர் வைக்கும் பட்டியலில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து தற்போது வரை 172 பெயர்களை பரிந்துரைத்து உள்ளன. அந்த பட்டியலின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெயர் தான் நிவர். இந்த பெயரை ஈரான் நாடு சூட்டியுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)