மனிதர்கள் மூன்று வகை உண்டு
கஜகர்ணம் :
யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது! அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்... அவர்களை 'கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம்
அஜகர்ணம்:
ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை' 'அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம்.
கோகர்ணம் :
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் ! அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் . இவர்களை 'கோகர்ணம் 'போடுபவர்கள் என்று அழைக்கிறோம்.
.png)