ஊறுகாய் ஸ்பெஷல்
தேவை:
சின்ன வெங்காயம் கால் கிலோ, மிளகாய்த்தூள் 50 கிராம், நல்லெண்ணெய் 150 கிராம், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், புளி -சிறிய எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு. பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை உரித்து, சுத்தம் செய்து உலர விட வும் (மேலே உள்ள கொண்டை மற்றும் கீழே உள்ள பகுதி இரண்டை யும் வெட்டிவிடவும்). வாணலியில் எண்ணெயை சூடாக்கிஞ் பெருங் காயம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, மிள காய்த்தூள், கடுகு, வெந்தயப் பொடி சேர்க்கவும். பிறகு, புளி யைக் கரைத்து சேர்க்கவும். நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
சின்ன வெங்காய ஊறுகாய்
.png)