வாழைப்பூ பக்கோடா
தேவை:
வாழைப்பூ ஒரு கப், கடலைமாவு அரை கப், அரிசிமாவு ஒரு டேபிள் ஸ்பூன், சோளமாவு ஒரு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம்1 (நறுக்கியது), பெருங்காயத்தூள் 2 சிட்டிகை, மிளகாய்த் தூள் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவைக்கேற்ப. உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைப்பூவை நரம்பு நீக்கி, நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, பெருங்காயம். உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாம் சேர்த்துப் கலக்கவும். பின் அதில் சிறிது நீர் தெளஜீத்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூ கலவையை உதிர் உதிராக போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சாப்பிட சுவையான வாழைப்பூ பக்கோடா தயார்.
.png)