வாழைப்பூ உருண்டை குழம்பு
தேவையானவை:
வாழைப்பூ -1 துவரம் பருப்பு - 100 கிராம் கடலை பருப்பு - 4 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 4 கடுகு வெந்தயம் - தாளிக்க சாம்பார்தூள் - 2 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும். புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி.
.png)