தமிழர்களின் 12 வகை உணவு பழக்க வழக்கங்கள்
1. அருந்துதல் - மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவது.
2. உண்ணல் - பசி தீரச் சாப்பிடுவது.
3. உறிஞ்சுதல் - நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்
4. குடித்தல் - நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5. தின்றல் - பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
6. துய்த்தல் - உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7. நக்கல் - நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
8. பருகல் - நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9. மாந்தல் - ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
10. கடித்தல் - கடினமான உணவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் - வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12. முழுங்கல் - முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது
.png)