பாமாயில் சுத்தப்படுத்த ஈஸியான சூப்பர் டிப்ஸ் இங்கே..!
பாமாயிலை சுத்திகரிக்க முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதன் மீது ஒரு இரும்பு சட்டியை வைக்கவும். பின் அதில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாகும் வேளையில், நீங்கள் கொட்டை நீக்கிய புளி, கல் உப்பு, ஒரு சின்ன துண்டு இஞ்சி ஆகியவை எடுத்து கொள்ள வேண்டும். பின் புளியை உருண்டையாக எடுத்து கொண்டு அதன் நடுவில் உப்பை நிரப்ப வேண்டும். குறிப்பாக புளிக்குள் இருக்கும் கல் உப்பு வெளியில் வராதபடிக்கு நன்கு உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த புளியை வடை போல உங்கள் உள்ளங்கையில் தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் போட வேண்டும். இவற்றிற்கு பின் சிறிது நேரம் கழித்து ஒரு சின்ன துண்டு இஞ்சியையும் அந்த எண்ணெயில் போட வேண்டும். எண்ணெய் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அப்படியே சூடாகவும். நீங்கள் எண்ணெயில் புளி மற்றும் இஞ்சி போடும்போதும் பொறிந்து கொண்டே இருக்கும். அவை அடங்கிய பின்னரே எண்ணெய்யை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். எண்ணெய் நன்கு ஆறிய பின் அவற்றை ஒரு பாட்டிலில் வடிக்கட்டிவும். இப்போது எண்ணெயின் நிறம் மாறியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில் இந்த பாமாயில் எண்ணெய்யில் உள்ள பித்தம் எல்லாவற்றையும் புளி மற்றும் இஞ்சி உறிஞ்சி எடுத்துவிடும். இப்போது நீங்கள் ரேஷன் கடையில் வாங்கிய பாமாயில் ஆரோக்கியமான முறையில் தயாராகி விட்டதால், இதனை தற்போது பயன்படுத்தலாம்.
.png)