கறிவேப்பிலை குழம்பு
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை 20 ஆர்க், தேங்காய் துருவியது 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4. மிளகு 1 டீஸ்பூன். து பருப்பு 1 டீஸ்பூன். க பருப்பு 1 டீஸ்பூன். தனியா 1 டீஸ்பூன். மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன். புளி சிறிதளவு. உப்பு தேவையான அளவு. வெந்தயம் 1/4 டீஸ்பூன். கடுகு 1/4 டீஸ்பூன். பெருங்காயம் சிறிது. பூண்டு 4 பல். சி வெங்காயம் 5. நல்லெண்ணெய் 2 குழிக் கரண்டி.
செய்முறை:
க பருப்பு, து பருப்பு, தனியா, மிளகாய், மிளகு அனைத்தையும் தீயை குறைய வைத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். கடைசியாக தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் ஒரு வாசனை வரவும் ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
இப்ப கடாயில் எண்ணெய் காய்ந்த பிறகு. கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்த பிறகு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிய உடன் அரைத்த விழுதை சேர்த்து அத்துடன் புளிக்கரைசல்,மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து மூடி போடவும் தீயை குறைய வைத்து அப்ப அப்ப கிளறவும். எண்ணெய் பிரியவும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெடி.
இத குளிர் சாதனப்பெட்டியில் வைக்காமலேயே ஒரு வாரம் கெடாமல் இருக்கும். ஈரம் இல்லாத கரண்டியை உபயோக படுத்தினால். இது சளி, உடம்பு வலிக்கும் நல்லது இத எல்லாருமே சாப்பிடலாம்.
மாதம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் நோய் இன்றி வாழ முடியும்.
.png)